ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டது எப்படி? வெளியான திடுக்கிடும் தகவல்

காமேனி அதிகாரிகளை சந்தித்த நேரத்தில் இஸ்ரேல் விமானப்படை 30 குண்டுகளை வீசி உள்ளது.
ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டது எப்படி? வெளியான திடுக்கிடும் தகவல்
Published on

வாஷிங்டன்,

ஈரானின் உயரிய அதிகாரம் பெற்ற நபராக காமேனி திகழ்ந்தார். அவருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் அவர் ரகசியமான இடத்திலேயே இருந்து வந்தார். முக்கியமான நேரத்தில் மட்டுமே பொது வெளியில் தலையை காட்டினார். அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுத்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக பல மாதங்களாக அமெரிக்கா திட்டமிட்டு வந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ரமலான் மாதத்தில் திடீரென நேற்று தாக்குதலை நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர், மகள், மருமகன், பேரக்குழந்தைகள், காமேனியின் ஆலோசகர், ஈரான் படைகளின் தலைவர் முகமது பக்போர் உள்ளிட்டோர் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்தநிலையில்,ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டது எப்படி? என்பது குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதில்,

காமேனி சந்திப்பு, சந்திப்பு நடக்க இருக்கும் இடம் குறித்து அமெரிக்காவின் சிஐஏ தகவல் சேகரித்திருக்கிறது.மத்திய தெஹ்ரானில் காமேனியின் ஒவ்வொரு நகர்வையும் அமெரிக்காவின் சிஐஏ கண்காணித்தது.

நேற்று காமேனி, ஈரான் தலைவர்கள் மற்றும் ராணு அதிகாரிகளோடு சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காமேனி சந்திப்பு, சந்திப்பு நடக்க இருக்கும் இடம் குறித்து சிஐஏ தகவல் சேகரித்திருக்கிறது. காமேனி ரகசிய சந்திப்பு குறித்த உளவுத்துறை தகவல்கள்களை சிஐஏ இஸ்ரேலுக்கு வழங்கி இருக்கிறது,

சி.ஐ.ஏ ஸ்கெட்ச் ஏற்படுத்தி கொடுத்த செயல் திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல், விமானப்படை மிக துல்லியமாக அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. காமேனி அதிகாரிகளை சந்தித்த நேரத்தில் இஸ்ரேல் விமானப்படை 30 குண்டுகளை வீசி உள்ளது. இந்த தாக்குதலில் அந்த கட்டடம் கடும் சேதமடைந்துள்ளதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன.ஈரான் தாக்குதலில் தொடர்புடைய அதிகாரிகள் தகவல் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக பழிவாங்குவது ஈரானின் கடமை மற்றும் சட்டப்பூர்வமான உரிமை என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த வரலாற்று குற்றத்திற்குக் காரணமானவர்களை பழிவாங்கும் பொறுப்பை நிறைவேற்ற ஈரான், தனது முழு பலத்தையும் பயன்படுத்தும் என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவை, ஈரான் தாக்காமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் அவர்கள் இதுவரை பார்த்திடாத அளவிற்கு மோசமான தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com