ஹவுடி-மோடி நிகழ்ச்சி: உலக அரங்கில் திறமைசாலிகள் இந்தியர்கள் - டிரம்ப் பேச்சு

ஹவுடி-மோடி நிகழ்ச்சியில் உரையாற்றும் போது, உலக அரங்கில் திறமைசாலிகள் இந்தியர்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
ஹவுடி-மோடி நிகழ்ச்சி: உலக அரங்கில் திறமைசாலிகள் இந்தியர்கள் - டிரம்ப் பேச்சு
Published on

நியூயார்க்,

பிரதமர் மோடி, அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் கலந்து கொண்ட ஹவுடி-மோடி நிகழ்ச்சி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, உலக அரசியலை, நிர்ணயிக்கும், நபராக, டிரம்ப் விளங்குகிறார். ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கும் போது உற்சாகம் ஏற்படுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் வலிமை மிக்கதாக மாற்றியவர் டிரம்ப் என்று பேசினார்.

அவரைத்தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா. மோடியுடன் இருப்பது பெருமையாக உணர்கிறேன். என் அருமை இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி. மோடி மிகச்சிறந்த செயல்களை செய்து வருகிறார். இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும். பிரதமர் மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்திய மக்கள் கடுமையான உழைப்பாளிகள். இந்திய சமுதாய மக்களுக்காக எங்களது அரசு உழைக்கிறது. ஜனநாயகத்தின் மீது இரு நாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளன. டிரம்பை தவிர வேறு சிறந்த நபரை இந்தியா பெற்றிருக்காது என்று கூறினார்.

மேலும் அவர், 30 கோடி மக்களை இந்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளது. மோடி தலைமையின் கீழ் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. அமெரிக்காவில் இந்திய உருக்கு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. இந்திய மருத்துவர்கள் மருத்துவதுறையில் பெரும் பங்காற்றி உள்ளனர். உலக அரங்கில் திறமைசாலிகள் இந்தியர்கள். உலக புகழ்பெற்ற என்.பி.ஏ போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும். மும்பையில் நடைபெறும் விளையாட்டு போட்டியை நான் காண வர வாய்ப்புள்ளது. விண்வெளித்துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். வரும் நவம்பர் மாதம் இரு நாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளன. தீவிரவாததுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவின் எல்லைபிரச்சனை குறித்து அமெரிக்கா உணர்ந்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் எல்லை பிரச்சனை உள்ளன. மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com