

புகுஷிமா,
ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அணு குண்டு வீச்சால் பேரழிவை சந்தித்த புகுஷிமா பகுதியை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளிவரவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து, அலைகள் சீற்றமோ, சுனாமியோ ஏற்படக்கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தற்போது வரை எந்த செய்தியும் வரவில்லை.