மனிதகுலத்தின் வெற்றி போர்க்களத்தில் அல்ல - ஐ.நா.வில் பிரதமர் மோடி உரை

மனித குலத்தில் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
மனிதகுலத்தின் வெற்றி போர்க்களத்தில் அல்ல - ஐ.நா.வில் பிரதமர் மோடி உரை
Published on

நியூயார்க்,

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 79-வது பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது;

"மனித குலத்தின் ஆறில் ஒரு பங்கினரின் குரலை இங்கு பதிவு செய்ய நான் வந்துள்ளேன். இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளோம். நிலையான வளர்ச்சியை வெற்றிகரமாக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துக் காட்டியுள்ளது. எங்களின் அனுபவத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.

மனித குலத்தில் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது. போர்க்களத்தில் அல்ல. உலகின் அமைதி, வளர்ச்சிக்கு உலகளாவிய அமைப்புகளில் சீர்த்திருத்தங்கள் அவசியம். ஒருபுறம், பயங்கரவாதம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மறுபுறம், சைபர், கடல் மற்றும் விண்வெளி ஆகியவை மோதலின் புதிய வடிவமாக உருவாகி வருகின்றன. இந்த எல்லாப் பிரச்சினைகளிலும், உலகளாவிய நடவடிக்கை உலகளாவிய லட்சியத்துடன் பொருந்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்துவேன்."

இவ்வாறு அவர் பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com