பிரேசிலில் வறட்சியால் இறந்த நூற்றுக்கணக்கான டால்பின்கள்.!

அமேசானின் கிளை நதிகள் வறண்டுள்ளதால், நூற்றுக்கணக்கான டால்பின்கள் இறந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் வறட்சியால் இறந்த நூற்றுக்கணக்கான டால்பின்கள்.!
Published on

பிரேசில்,

பிரேசிலில், மழைக்காடுகளின் வழியாக ஓடும் அமேசான் நதியின் கிளை நதிகள் வறண்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத வறட்சி காரணமாக, அமேசானின் கிளை நதிகள் வறண்டுள்ளன.

இதன் காரணமாக, அந்த நதிகளின் வழியாக தெலை தூர கிராமங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த படகு பேக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பெருட்களை கெண்டு செல்வது பாதிக்கப்பட்டு, பெதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், நூற்றுக்கணக்கான டால்பின்களும் இறந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், ஏராளமான படகுகள் தரைத்தட்டி கிடக்கின்றன. இதுதெடர்பான ட்ரேன் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com