ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - வடகொரியா வெற்றிகரமாக சோதனை

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது மகளுடன் நேரில் சென்று ஏவுகணை சோதனையை பார்வையிட்டார்.
ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - வடகொரியா வெற்றிகரமாக சோதனை
Published on

பியாங்யாங்,

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அதிநவீன அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை நடுங்க வைத்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலும், வடகொரியா தனது பிடிவாதத்தை கைவிடாமல் புதிய ஏவுகணை சோதனையில் குதித்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது மகளுடன் நேரில் சென்று இந்த ஏவுகணை சோதனையை பார்வையிட்டார். ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக சென்று இலக்கைத் தாக்கும் 'ஹவாசாங்-11 மா' என்ற புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இந்த வியூகம் எதிரி நாடுகளுக்கு 'குணப்படுத்த முடியாத தீராத தலைவலியை' கொடுக்கும் என்று கிம் ஜாங் அன் மிரட்டல் விடுத்துள்ளார். கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் சுமார் 600 கி.மீ தூரம் கடலில் பாய்ந்து விழுந்ததாக தென்கொரிய ராணுவம் உறுதி செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com