என்ன கொடுமை சார் இது...! மொபைல் போனை பறித்த திருடனிடம் மனதை பறிகொடுத்த பெண்...! 2 வருடமாக காதல்...!

இம்மானுவேலுக்கு அந்த நபரை பிடித்து போய்விட்டது. மொபைலை திருப்பி கொடுத்தவர் பதிலாக அவரது இதயத்தை திருடி விட்டார்.
என்ன கொடுமை சார் இது...! மொபைல் போனை பறித்த திருடனிடம் மனதை பறிகொடுத்த பெண்...! 2 வருடமாக காதல்...!
Published on

பிரேசிலை சேர்ந்த இம்மானுவேல் என்ற இளம் பெண் தனது மொபைலோடு வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் அந்த மொபைல் போனை பறித்து கொண்டு ஓடியுள்ளார். ஐயோ திருடன் ஐயோ திருடன் என்று கத்தியும் பலனில்லை.

ஆனால், மொபைலை பறித்து கொண்டு ஓடிய திருடனோ கொஞ்ச நேரம் ஓடிய பிறகு என்ன போன் நாம் திருடியது என்பதை   அந்த மொபைலை எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அந்த மொபைல் போன் சொந்தகாரரான இம்மானுவேல் போட்டோ அதில் இருப்பதை பார்த்து, ஆகா என்ன ஒரு அழகான பெண், இவரிடம் திருடி தப்பு செய்துவிட்டோமே என்று வருந்தியுள்ளார்.

பின்னர் அந்த பெண்ணிடம் மன்னிப்புகேட்டு போனை திருப்பி கொடுத்து உள்ளார். இதில் இம்மானுவேலுக்கு அந்த நபரை  பிடித்து போய்விட்டது. மொபைலை திருப்பி கொடுத்தவர் பதிலாக அவரது இதயத்தை திருடி விட்டார்.

கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறார்கள். இது குறித்து காதல் ஜோடி பேட்டி அளித்து உள்ளனர்.

இந்த வீடியோவை ஒரு பிரேசில் ஊடகவியலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரேசிலில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்கும் என்று பதிவிட்டு உள்ளார்.

இது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது உண்மை என்று நம்புவது கடினம் மற்றும் சமூக ஊடக பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

"பிரேசிலில், ஒரு குற்றவாளியைக் காதலிப்பது இயல்பானது" என்று உள்ளூர்வாசி ஒருவர் கருத்து தெரிவித்தார்.

 "அன்பினால் எதையும் சாதிக்க முடியும்."மற்றொருவர் கூறி உள்ளார்

கருத்து தெரிவித்துள்ள ஒருவர் இதை பார்த்து "எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை." என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com