'கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்' - இறுதி உரையில் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்


கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் - இறுதி உரையில் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்
x

கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என தனது இறுதி உரையில் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஒட்டாவா,

பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது கனடா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(வயது 53), தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015-ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக பதவி ஏற்றார். கனடாவின் புதிய பிரதமரை ஆளும் லிபரல் கட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க உள்ளது.

தற்போது கனடாவின் இடைக்கால பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், பதவி விலகுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து தனது இறுதி உரையை நிகழ்த்தினார். அப்போது ஜஸ்டின் ட்ரூடோ கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று உருக்கமாக பேசினார். தொடர்ந்து அவர் கூறியதாவது;-

"பிரதமர் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும், நான் கனடா மக்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்காக உழைத்தேன். மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதை உறுதிசெய்துள்ளேன். மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதியாக சொல்கிறேன். எனது தலைமையிலான அரசாங்கத்தின் கடைசி நாட்களில் கூட, நான் கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்பதை கூற விரும்புகிறேன்."

இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ பேசினார்.

1 More update

Next Story