ஈரான் விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்க மாட்டேன்: டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த 3-ந்தேதி நடந்த பாராளுமன்ற இடைக்கால தேர்தல் தோல்விக்கு பிறகு ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் தொடங்கும் என்று தகவல் வெளியானது.
டிரம்ப்
டிரம்ப்
Published on: 

அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்காவுக்கு திரும்பும்போது விமானத்தில் பேட்டி அளித்தார்.அப்போது, ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்துமா என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு டிரம்ப் பதிலளித்து கூறியதாவது:- எங்களிடம் போர்த் திட்டம் உள்ளது.

ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு என்ன நடக்கும் என்று பார்ப்போம். இதுதொடர்பாக நான் ஆண்டின் தொடக்கத்திற்குப் பிறகு உங்களிடம் கூற வேண்டும். ஈரான் விவகாரத்தில் முடிவெடுக்க நான் அவசரப்பட மாட்டேன். ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தம் தொடர்ந்து நீடிப்பதால் இவ்விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என்றார்.

அமெரிக்காவில் கடந்த 3-ந்தேதி நடந்த பாராளுமன்ற இடைக்கால தேர்தல் தோல்விக்கு பிறகு ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு ஈரான் போர் காரணம் என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஈரான் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்க டிரம்ப் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

X