கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்றால்... ஐ.நா. வெளியிட்ட எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை எனில் மீண்டும் ஒரு கொரோனா மாறுபாடு ஏற்படும் என ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்றால்... ஐ.நா. வெளியிட்ட எச்சரிக்கை
Published on

நியூயார்க்,

உலகம் முழுவதும் கொரோனா பரவல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்தவகையில் கொரோனாவில் இருந்து புதிய வகையாக டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என புதிய வகைகள் அச்சுறுத்தலாக உள்ளன.

இந்நிலையில் 2022 உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய குட்டெரெஸ் கூறும்போது, உலகம் முழுவதும் தடுப்பூசி இயக்க பணிகளை விரைவுபடுத்துவது குறித்து வலியுறுத்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் பலரை இழந்து தவிக்கிறோம்.

இந்தநிலை இப்படியே நீடித்தால் அன்றாட வாழ்க்கையும், பொருளாதாரமும் சீர்குலையும் நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போட தவறினால் புதிய மாறுபாடுகளை சந்திக்க நேரிடும் என கூறினார். 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும், நடுப்பகுதியில் 70 சதவீதத்திற்கும் தடுப்பூசி போட வேண்டும் என கூறிய உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த இலக்குகளை, உலகம் எங்கும் நெருங்கவில்லை என்றும் குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப பகிர்வின் மூலம் வளரும் நாடுகளுடன் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். அப்பொழுது தான் உயிரை பறிக்கும் தொற்றுநோயிலிருந்து ஒரு வழியை கண்டுபிடிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com