இந்திய நிலப்பரப்பில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு; ஐ.நா. சபையில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா

இந்திய விடுதலை சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி, 1947-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்த இந்த பகுதியானது முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மாற்ற முடியாதது.
இந்திய நிலப்பரப்பில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு; ஐ.நா. சபையில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா
Published on

ஜெனீவா

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் கடந்த 23-ந்தேதியில் இருந்து மார்ச் 31-ந்தேதி வரை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 61-வது கூட்டம் நடக்கிறது. இதில், உயர்மட்ட கூட்டத்தில், இந்தியாவுக்கான பதிலளிப்பதற்கான உரிமையை பயன்படுத்தி, ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதியான அனுபமா சிங் பேசினார்.

அவர் பேசும்போது, பாகிஸ்தானின் தொடர் பிரசாரம் அதன் பொறாமையையே வெளிப்படுத்துகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சிக்கான பாதை இன்று வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால், அதற்கு மாறாக, பாகிஸ்தானோ பொருளாதார சிக்கல்களில் சிக்கி தவித்து வருகிறது.

Also Read
திருச்சியில் திரள்வோம்... திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்: கே.என். நேரு அறிக்கை
இந்திய நிலப்பரப்பில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு; ஐ.நா. சபையில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா

ஜம்மு மற்றும் காஷ்மீர் கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் மற்றும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கப்படாத பகுதியாகவே இருக்கும். எங்களுடைய இந்த நீண்டகால நிலைப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என கூறினார்.

இந்திய விடுதலை சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின்படி, 1947-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்த இந்த பகுதியானது முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மாற்ற முடியாதது. இந்த பகுதிக்கான விவாதம் என்பது, இந்திய நிலப்பரப்பை சட்டவிரோத வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்பதுதான் என்றும் எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இந்த பகுதியை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com