புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்க என்னை அழைக்கிறார்கள்..கெஞ்சும் ஈரான் - டிரம்ப் கிண்டல்

ஈரானில் இருந்து பேச்சுவார்த்தைக்கு வருபவர்கள் மிக 'விசித்திரமானவர்கள்' என டிரம்ப் கூறியுள்ளார்.
புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்க என்னை அழைக்கிறார்கள்..கெஞ்சும் ஈரான் -  டிரம்ப் கிண்டல்
Published on

வாஷிங்டன்,

வளைகுடா நாடுகளில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா 15 அம்ச திட்டத்தை வகுத்து உள்ளது. எகிப்து பாகிஸ்தான், அதிகாரிகள் ஒப்படைத்த இந்த திட்டத்தை ஏற்க ஈரான் மறுத்து விட்டது.

இந்த நிலையில் கமெனியின் மறைவுக்கு பிறகு புதிய உச்ச தலைவராக என்னை பொறுப்பேற்க ஈரான் அழைத்தது என்றும் அதை தான் நிராகரித்து விட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய தகவலை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக கூறியதாவது:-

கடந்த 47 ஆண்டுகளாக எந்த அமெரிக்க ஜனாதிபதி செய்ய துணியாததை நாங்கள் செய்து முடித்து உள்ளோம். ஈரானின் அணு ஆயுத மிரட்டல் புற்று நோயாகும். ஆபத்தான புற்றுநோய் அகற்றப்பட வேண்டும்.

அதனால் தான் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தற்போது தொடங்கி உள்ள இந்தப் பணியை முழுமையாக முடித்து ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள ஈரான் விரும்புகிறது. ஆனால் அதை சொல்ல அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் சொந்த மக்களால் கொல்லப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

மேலும் அவர்கள் எங்களால் கொல்லப்படுவார்கள் என்றும் பயப்படுகிறார்கள். அவர்கள் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தவும் விரும்புகிறார்கள்.

கமெனியின் மறைவுக்கு பிறகு இஸ்லாமிய குடியரசான ஈரானின் அடுத்த உச்ச தலைவராக நான் வர வேண்டும் என்ற யோசனையை ஈரான் தலைமை முன்வைத்தது. ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன்.

இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.

அமெரிக்க தாக்குதல்களில் ஈரானின் பல உயர் நிலை தலைவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு நிலவும் அதிகார வெற்றிடத்திற்கு மத்தியில் டிரம்ப்பின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com