கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு உதவிய இந்தியாவை பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்!

பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக, இந்தியாவுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர், கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டுக்களை தெரிவித்தார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு உதவிய இந்தியாவை பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்!
Published on: 

வாஷிங்டன்,

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கெண்டார்.

அப்போது அவரிடம், மோசமான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக, இந்தியாவுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர், கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டுக்களை தெரிவித்தார்.

இலங்கையின் நிதி நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு இந்தியா அளித்த உதவியை அவர் பாராட்டினார்.

மேலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வெற்றிகரமான இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

நிதி அமைச்சகத்தின் அடிப்படையில், எளிதில் பாதிக்கப்படக்கூடிய பல்வேறு சர்வதேச பகுதிகளுக்கு கொரோனாவை எதிர்கொள்ள இந்தியா தனது உதவியை விரிவுபடுத்தியதற்காக அவர் இந்தியாவை பாராட்டினார்.

இந்தியாவின் தீர்க்கமான இலக்குகளை கொண்ட நடவடிக்கைகளே, இந்திய நாட்டின் பொருளாதார அமைப்பு சீராக இருக்க உதவியது என்றார்.

மேலும், அந்த ஆலோசனை கூட்டத்தில் உலகளாவிய பொருளாதார நிலவரம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், இந்தியாவின் முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் வலுவான நிதிக் காப்பீட்டுக் கொள்கைகள் தான், கொரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய இந்தியாவின் நிதி மறுசீரமைப்பிற்கு உதவியுள்ளன என்றார்.

வாஷிங்டனில் மாநாடுகள் முடிவடைந்தவுடன், மந்திரி நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 24 அன்று சான் பிரான்சிஸ்கோவுக்கு செல்வார். அங்கு பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற பின், அவர் ஏப்ரல் 27 அன்று இந்தியா புறப்படுகிறார்.

X