இந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம்

தேர்தல் நடக்கும் ஆண்டாக இருந்தாலும் இந்தியா நிதி ஒழுங்கை பராமரித்து வருவது பாராட்டுக்குரியது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம்
Published on

வாஷிங்டன்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறை இயக்குனர் கிருஷ்ண சீனிவாசன் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்திய பொருளாதாரம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்துள்ளோம். இது நல்ல வளர்ச்சிதான். பணவீக்கம் சரிந்து கொண்டிருக்கிறது. நிர்ணயித்த இலக்குக்கு குறைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இருப்பினும், தாங்கக்கூடிய வகையில்தான் பணவீக்கம் இருக்கிறது.

தேர்தல் நடக்கும் ஆண்டாக இருந்தபோதிலும், இந்தியா நிதி ஒழுங்கை பராமரித்து வருவது பாராட்டுக்குரியது. மற்ற நாடுகள், தேர்தல் ஆண்டில் நிதியை தாறுமாறாக பயன்படுத்துவது வழக்கம். இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை கோடிபேர், பணியாளர்களாக சேர்ந்து வருகிறார்கள். இத்தகைய காரணங்களால் இந்திய பொருளாதாரம், தொடர்ந்து உலகத்திலேயே பிரகாசமான இடத்தில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com