இந்தியாவுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

ரஷியாவுக்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது என டிரம்ப் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து அரசு நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வந்த டொனால்டு டிரம்ப், உலக பொருளாதாரத்தில் 2-ம் இடத்தில் உள்ள சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து உத்தரவிட்டார். கனடா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கடந்த ஆண்டில் கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

இந்நிலையில், உக்ரைன் போரை தடுத்து நிறுத்தும் நோக்கில், ரஷியாவுக்கு பைடன் அரசின்போது அமெரிக்கா தடைகளை விதித்து வந்தது. இந்த நிலையில், டிரம்ப் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கான வரி விதிப்பு அதிகரித்தது.

கோப்புப்படம்
வடகிழக்கு மாநிலங்களுக்கு மிக உயரிய மதிப்பளித்தவர் பிரதமர் மோடி: மத்திய மந்திரி சோனோவால்

ரஷிய எண்ணெய்யை இந்தியா வாங்குகிறது. அதனால், போர் தளவாடங்கள் வாங்க நிதியை ரஷியா பயன்படுத்தி கொள்கிறது என குற்றம் சாட்டி இந்தியாவுக்கான வரியை அமெரிக்கா அதிகரித்தது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வரி குறைப்புக்கான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வரியை குறைப்பது தொடர்பான அறிவிப்பும் இருக்கும் என கூறப்பட்டது.

இந்த சூழலில், பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இன்றிரவு பேசியுள்ளார். இதனை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதன்படி, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று இறுதி செய்யப்பட்டு உள்ளது என டிரம்ப் அறிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதற்கு பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்து உள்ளார் என்றும் ரஷியாவுக்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அறிவித்துள்ள டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலிமையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதேபோன்று, அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்படும் வரியை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com