சவுதி அரேபியாவில் விமானம் இன்றி தவிக்கும் இந்தியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இந்திய பயணிகளுக்கு உதவ தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் விமானம் இன்றி தவிக்கும் இந்தியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
Published on

சவுதி அரேபியா,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதன்படி, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ படைத்தளம் அமைந்துள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் சவுதி அரேபியா உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வான்வெளி மூடல்கள் அல்லது விமான ரத்துகள் காரணமாக பயண இடையூறுகளை எதிர்கொள்ளும் சவுதி அரேபியாவில் உள்ள எந்தவொரு இந்திய பயணிகளும், எங்கள் பல்வேறு 24*7 உதவி எண்கள் மூலம் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். சிக்கித் தவிக்கும் இந்திய பயணிகளுக்கு உதவ தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்வேறு இந்திய விமான நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

பயணிகள் சமீபத்திய தகவல்களைப் பற்றி அறிந்துகொள்ள, அந்தந்த விமான நிறுவனங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளைப் பின்பற்றவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். வசதிக்காக, இந்திய விமான நிறுவனங்களுக்கான இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com