வீட்டுக் காவலில் இம்ரான் கான் எந்த நேரமும் கைதாகலாம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டுக் காவலில் இம்ரான் கான் எந்த நேரமும் கைதாகலாம்
Published on

..! இஸ்லாமாபாத்

இம்ரான் ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் இம்ரான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும், தற்போது அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை தொடர்ந்து அவரது வீட்டு முன் ஆயிரகணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் குவிந்து உள்ளனர்.

பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் தலைவர்கள் தாரிக் ஷாபி, ஹமீத் ஜமான் மற்றும் சைப் நியாசி ஆகியோர் ஏற்கனவே பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் மிகப்பெரிய பேரணிந் அடத்த இம்ரான்கான் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கைபர் பக்துன்குவா அல்லது பஞ்சாப் அல்லது ராவத் டி-கிராஸில் தெற்கில் இருந்து பேரணியாக் தலைநகருக்குள் நுழைய முயன்றால், இஸ்லாமாபாத்திற்கு நுழைவதற்கு முன்பு இம்ரான்கானை கைது செய்ய அரசாங்கம் திட்டம்மிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com