இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் கட்சியினர் இன்று பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி

இம்ரான்கானின் கட்சியினர் இன்று பேரணி, பொதுக்கூட்டம் நடத்த இஸ்லாமாபாத் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் கட்சியினர் இன்று பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

தனது அரசை வெளிநாட்டு சக்தி சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனே பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகிறார். தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார்.

அந்த வகையில், இன்று(2-ந்தேதி) இஸ்லாமாபாத்தில் அணிவகுப்பு மைதானத்தில் பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடத்த இம்ரான்கான் திட்டமிட்டுள்ளார். இதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், தங்களது பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு, இஸ்லாமாபாத் போலீஸ் துணை கமிஷனருக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அவர் அனுமதி தராமல் தாமதம் செய்வததாகக் கூறி, அனுமதி தருமாறு உத்தரவிடக் கோரி இருந்தனர். இந்த நிலையில், இம்ரான்கானின் கட்சியினர் இன்று பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com