காபூல் விமான நிலையத்தில் தலிபான்கள் தாக்குதல்?

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
காபூல் விமான நிலையத்தில் தலிபான்கள் தாக்குதல்?
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானின் காபூல் விமானநிலையத்தில் தலிபான் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

காபூல் விமான நிலையம், அமெரிக்க தூதரத்திற்கு அமெரிக்கர்கள் யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஏற்கனவே அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com