

காபூல்,
தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் ராணுவமும், அமெரிக்க படைகளும் போராடி வருகின்றன.
இந்த நிலையில் கஜினி மாகாணத்தின் திக் யாக் மாவட்டத்தில் உள்ள ஷாக்ஹோக் என்கிற இடத்தில் சாலைக்கு அடியில் பயங்கரவாதிகள் கண்ணி வெடிகுண்டுகளை புதைத்து வைத்தனர்.
அந்த சாலையில் சென்ற மினி பஸ் ஒன்று கண்ணி வெடியில் சிக்கியது. வெடிகுண்டு வெடித்து சிதறியதில் மினி பஸ் உருக்குலைந்து போனது. அதில் பயணம் செய்த அப்பாவி மக்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் தலீபான் பயங்கரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.