

அபுதாபி,
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இன்று காலை புறப்பட்டார். அவர் 6 நாட்கள் பயணமாக 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், நார்வே, சுவீடன், நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
இந்தநிலையில், தனது பயணத்தின் முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு சார்பில் உற்சாக ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுதாகி உள்ளன.
எல்.பி.ஜி விநியோகம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய உள்கட்டமைப்புகளுக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யவும், இந்தியாவில் பெட்ரோலிய மூலங்களை கண்டுபிடிப்பது தொடர்பாகவும் இந்தியாவில் கச்சா பெட்ரோலியத்தை இருப்பு வைப்பது குறித்தும்,
இந்தியாவில் கப்பல் பழுதுபார்க்கும் மையங்களை அமைத்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.