ஈரானில் நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கி பெண் பலி

ஈரானில் நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியானார்.
ஈரானில் நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கி பெண் பலி
Published on

துபாய்,

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கிராமங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இடிபாடுகளில் சிக்கி 18 வயது பெண் ஒருவர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானில் அடிக்கடி இதுபோன்று நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பயங்கர நிலநடுக்கத்தில் 620க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com