

* ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களில் ஒரு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக நிர்வாக தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார். எனினும் அவர் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றாரா? என்பது குறித்து தகவல் இல்லை.
* ஈராக்கில் சலாலுதீன் மாகாணத்தில் அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இந்த ஆயுதக்குழுவை சேர்ந்த 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
* ஐரோப்பியா யூனியனில் இருந்து இங்கிலாந்து ஒப்பந்தத்துடன் வெளியேறுவதற்கான காலக்கெடு விரைவில் முடியவிருப்பதால், ஒப்பந்தம் இல்லாமல் வெளிறே தேவையான தங்கள் தரப்பு ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். அதே சமயம் அதை தவிர்ப்பதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
* கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அகதிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.