மெக்சிகோவில் பரிதாபம்: சாலை விபத்தில் 25 அகதிகள் பலி

மெக்சிகோவில் சாலை விபத்தில் 25 அகதிகள் பரிதாபமாக பலியாகினர்.
மெக்சிகோவில் பரிதாபம்: சாலை விபத்தில் 25 அகதிகள் பலி
Published on

மெக்சிகோ சிட்டி,

மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் மெக்சிகோவில் நேற்று முன்தினம் ஒரு லாரியில் பயணம் செய்தனர். அங்குள்ள சியாபாஸ் மாகாணத்தின், சோயலோ என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் அந்த லாரி சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

இதில் அந்த லாரியில் பயணம் செய்த அகதிகளில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை மெக்சிகோ செஞ்சிலுவை சங்கத்தினர், மனித உரிமை பாதுகாப்பு முகமையினர், உள்ளூர் போலீசார் செய்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com