ரஷியாவில் முதல்முறையாக 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

ரஷியாவில் முதல்முறையாக 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் முதல்முறையாக 18 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
Published on

மாஸ்கோ,

ரஷிய நாட்டில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் 18 தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் முறையாக போடப்பட்டது. இந்த ஊசி போடப்பட்டதில், அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவு ஏற்பட்டதாகவோ, அவர்களது உடல்நிலை குறித்து புகார் எதுவும் எழுந்ததாகவோ தகவல் இல்லை என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர்கள் அனைவரும் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர மேற்பார்வையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறி உள்ளது.

ரஷியாவில் 5.60 லட்சம் பேரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்து உள்ளது, 7,600 பேரின் உயிரை பறித்தும் இருக்கிறது. இந்த நிலையில், அங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, 18 பேருக்கு செலுத்தி பரிசோதித்து இருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com