பிரான்ஸ் நாட்டில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம்

பிரான்ஸ் நாட்டில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
பிரான்ஸ் நாட்டில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம்
Published on


* அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி கெவின் மெக்காலினன் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்கு சாத் வோல்ப் என்பவரை நியமிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

* பிரான்ஸ் நாட்டின் மார்சே நகரில் உள்ள ஒரு பாரில் புகுந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அங்குள்ள இஸ்லாமிய அமைப்பு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நடத்திய வாகனப் பேரணி பல்வேறு நகரங்கள் வழியாக இஸ்லாமபாத்தை வந்தடைந்தது. நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்துவதாக அவர் மீது அந்த அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.

* சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் குர்து இன மக்களை குறிவைத்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்போது சிறைபிடிக்கப்பட்ட 18 சிரிய படையினரை ரஷியாவிடம் துருக்கி அரசு ஒப்படைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com