இங்கிலாந்தில் பரபரப்பு: விமானம் புறப்படும் நேரத்தில் ‘திடீர்’ வெடிச்சத்தம் - 8 பேர் படுகாயம்

இங்கிலாந்தில் விமானம் புறப்படும் நேரத்தில் திடீரென வெடிச்சத்தம் கேட்டதால், முண்டியடித்து கொண்டு வெளியேறியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இங்கிலாந்தில் பரபரப்பு: விமானம் புறப்படும் நேரத்தில் ‘திடீர்’ வெடிச்சத்தம் - 8 பேர் படுகாயம்
Published on

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டான்ஸ்டன் விமான நிலையத்தில் இருந்து, ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கு 175 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாரானது.

ஓடுபாதையில் இருந்து மேலே எழும்ப முயன்ற போது விமானத்தில், திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் பயத்தில் அலறினர். உடனடியாக விமானம் அவசரம் அவசரமாக நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தின் அவசர வாசல் வழியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விமானம் தனிமைப்படுத்தப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விமான எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிச்சத்தம் கேட்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com