அமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’

அமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் பணியில் போலீஸ் ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் பொது இடங்களில் குற்றச் செயல்கள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் போலீசார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுவது வழக்கம். அண்மை காலமாக இந்த பணியில் போலீசாருக்கு பதில் புதிய, புதிய தொழில்நுட்பங்களை அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி உள்ளது.

அந்தவகையில், கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், பொதுமக்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை கண்காணிக்கவும், தரவுகளை சேகரித்து போலீஸ் தலைமையகத்துக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்கவும், ஹெச்பி ரோபோகாப் என்கிற ரோபோ பணியமர்த்தப்பட்டு உள்ளது.

இது 4 புறமும் உயர் தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு சுமார் 5-6 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவின் நடைபாதையில் மக்களோடு மக்களாக சுற்றி ரோந்து பணியில் ஈடுபடும் இந்த ரோபோ கொஞ்சம் வழிவிடுங்கள் மற்றும் இன்றைய தினம் நல்ல நாளாக அமையட்டும் போன்ற வார்த்தைகளை கூறி பூங்காவுக்கு வருவோரை கவர்ந்து வருகிறது.

இந்த போலீஸ் ரோபோ பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com