உகாண்டாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு

உகாண்டாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
உகாண்டாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு
Published on

* மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடாரில் அமண்டா புயல் ருத்ரதாண்டவமாடி உள்ளது. இந்த புயலாலும், மழையாலும், நிலச்சரிவாலும் வெள்ளத்தாலும் அங்கு 14 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதையொட்டி அங்கு 15 நாட்கள் நெருக்கடி நிலை அமலில் இருக்கும் என அந்த நாட்டின் அதிபர் நயீப் புக்கேலே அறிவித்துள்ளார்.

* கிழக்கு ஜெருசலேம் நகரில் இயாத் ஹலாக் என்ற வாலிபர் கடந்த சனிக்கிழமையன்று நடந்து சென்று கொண்டிருந்தபோது கையில் ஆயுதம் வைத்திருந்ததாக சந்தேகித்து இஸ்ரேல் போலீசார் அவரை சுட்டுக்கொன்று விட்டனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று முன்தினம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

* உகாண்டாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பள்ளிகளை திறப்பதை மேலும் ஒரு மாதத்துக்கு ஒத்தி வைத்து அந்த நாட்டின் அதிபர் முசவேனி உத்தரவிட்டுள்ளார்.

* லண்டனில் ஹாரோ பகுதியில் வாலிபர் ஒருவர் மீது வாகனத்தை ஏற்றியதுடன் கத்தியால் குத்திவிட்டு தப்பி உள்ளனர். இந்த வாலிபர் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் சிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com