உள்நாட்டு தேவை அதிகரிப்பு: சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசு முழு தடை...!

உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால் சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசு முழுமையான தடை விதித்துள்ளது.
உள்நாட்டு தேவை அதிகரிப்பு: சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசு முழு தடை...!
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதித்துள்ளது என்று அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு, சர்க்கரை ஏற்றுமதியை முழுமையாக தடை செய்து உத்தரவிட்டுள்ளேன். சர்க்கரை கடத்தல் மற்றும் பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் கடமைகளில் அலட்சியமாக இருப்பவர்கள் மீது சகிப்புத்தன்மை காட்டப்படாது. தனது உத்தரவுகளை அமல்படுத்துவது குறித்த விவரங்களை உடனுக்குடன் தனக்குத் தெரிவிக்கும்படி சம்பந்தப்பட்ட துறைகளிடம் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.

உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மீதான தடை என்பது, நாட்டில் அதன் விலையை உயராமல் தடுக்கும் நோக்கம் கொண்டது என்று அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com