இலங்கையில் 60 மருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு.. கடும் இன்னலுக்கு ஆளாகும் மக்கள்

இலங்கையில் மருந்து பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

இலங்கையில் மருந்து பொருட்களின் விலை 40 சதவீதம் வரை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இலங்கை சுகாதாரத்துறை மந்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்தாம் இலக்க தேசிய மருந்து ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் மருந்துகளின் விலை 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் பாராசிட்டமல், ஆஸ்பரின் உள்ளிட்ட 60 மருந்து பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில், தற்போது மருந்து பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com