

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்கள் குறித்து டுவிட்டரில் நேற்று தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து, பன்முக இந்தியாவை விரும்புகிற இந்தியர்கள் போராட தொடங்கி உள்ளனர். இது மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது. போராட்டங்கள் அதிகரித்து வருகிற நிலையில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. உள்நாட்டு பிரச்சினையில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஏதாவது நடவடிக்கை எடுத்தால், பாகிஸ்தான் உரிய பதிலடி தருவதைத் தவிர வேறு வழி இல்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.