ஜப்பானில் உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

ஜப்பானில் சமீபநாட்களாக உருமாற்றம் அடைந்த கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
ஜப்பானில் உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
Published on

டோக்கியோ,

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. ஜப்பானில் சமீபநாட்களாக உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜனவரி 29-ந் தேதி தொடங்கிய வாரத்தில், 173 பேருக்கு கொரோனா தாக்கியதில், 8 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பிப்ரவரி 12-ந் தேதியுடன் தொடங்கிய வாரத்தில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 15.2 சதவீதம் பேர் உருமாறிய கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள் ஆவர். அதுபோல், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் சமீபகாலமாக உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com