உக்ரைன்-ரஷியா போர்நிறுத்தம் தொடர்பாக ஐ.நா.வில் தீர்மானம்; வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா

இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி இருந்தன.
உக்ரைன்-ரஷியா போர்நிறுத்தம் தொடர்பாக ஐ.நா.வில் தீர்மானம்; வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா
Published on

கீவ்

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் தொடங்கியது. இந்த போர், நேற்றுடன் 4-ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இன்று 5-ம் ஆண்டாக தொடரும் போர், இன்னும் ஒரு முடிவுக்கு வருவதற்கான தீர்வு ஏற்படாமல் உள்ளது.

இந்த சூழலில், 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. பொது சபையில் இதுதொடர்பாக வரைவு தீர்மானம் ஒன்று நேற்று கொண்டு வரப்பட்டது. உக்ரைன் கொண்டு வந்த அந்த தீர்மானத்தில் உக்ரைன் மற்றும் ரஷியா நாடுகள் இடையே உடனடியான, முழு அளவிலான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

Also Read
பொருளாதாரத்தில் 22 நோபல் பரிசு பெற்றவர்கள் கூட செய்யாத விசயங்களை செய்தேன்: டிரம்ப் பேச்சு
உக்ரைன்-ரஷியா போர்நிறுத்தம் தொடர்பாக ஐ.நா.வில் தீர்மானம்; வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா

உக்ரைனுக்கு நீண்ட கால அமைதிக்கு ஆதரவு என்ற தலைப்பிலான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 107 ஓட்டுகள் கிடைத்தன. எனினும், எதிராகவும் 12 ஓட்டுகள் விழுந்தன.

இந்த நிலையில், ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற எந்த நிலைப்பாடும் இல்லாமல் தீர்மானத்தில் இருந்து விலகி இருக்கும் முடிவை இந்தியா உள்ளிட்ட 51 நாடுகள் எடுத்தன. இதனால், அவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி இருந்தன.

இதில் இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளும் உள்ளன. அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, சீனா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் நடுநிலையை தேர்ந்தெடுத்தன. உக்ரைன் கொண்டு வந்த அந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்து, ஓட்டு போட்ட நாடுகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com