ஈரானுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்; குடிமக்களுக்கு இந்தியா அறிவுறுத்தல்

ஈரானில் நடந்து வரும் ஒரு வார போராட்டத்தில் 16 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என கூறப்படுகிறது.
ஈரானுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்; குடிமக்களுக்கு இந்தியா அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி,

ஈரான் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் மக்களிடையே பெரும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. பொருளாதார தேக்கநிலையும் காணப்படுகிறது. இதனால், அரசுக்கு எதிரான குடிமக்களின் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை ஒடுக்க அரசு, பாதுகாப்பு படையினரை இறக்கி விட்டு உள்ளது. ஒருபுறம் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், வன்முறை, போராட்டத்தில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர். இதன்படி, ஒரு வாரத்தில் 16 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சகம், ஈரானுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. போராட்டம் அல்லது ஆர்ப்பாட்ட பகுதிகளை தவிர்க்கும்படியும், செய்திகளை உன்னிப்பாக கவனிக்கும்படியும், வலைதளங்களை பார்க்கும்படியும், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் சமூக வலைதள பதிவுகளை காணும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com