கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா பெரும் ஆபத்தில் உள்ளது -ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ் கவலை தெரிவித்துள்ளார்.
கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா பெரும் ஆபத்தில் உள்ளது -ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை
Published on

பாங்காக்

தாய்லாந்தில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஐ.நா பெதுச்செயலாளர் ஆன்டேனியே குட்ரஸ் பாங்காக்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்பு கணிக்கப்பட்டதை விட தற்பேது கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. கிளைமேட் சென்ட்ரல் எனும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் சமீபத்திய அறிக்கையில், இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கெள்ள வேண்டியது அவசியம். வரும் 2050-ம் ஆண்டுக்குள் 45 சதவீத அளவுக்கு கரியமில வாயு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டை முடிவுக்குக் கெண்டு வர வேண்டியது மிகவும் அவசியம். புதிதாக அனல் மின் நிலையங்கள் அமையாமல் பார்த்துக் கெள்ள வேண்டும்.

புவி வெப்பமயமாவதால், இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். தாய்லாந்தில் 10 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com