இந்திய மாணவர்கள் வர அனுமதிப்பது பற்றி இந்தியா-சீனா ஆலோசனை

சீனா கொரோனா கட்டுப்பாடுகளை கடுமை ஆக்கியதாலும், விமானங்கள் நிறுத்தப்பட்டதாலும் இந்திய மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்திய மாணவர்கள் வர அனுமதிப்பது பற்றி இந்தியா-சீனா ஆலோசனை
Published on

பீஜிங்,

கடந்த 2020-ம் ஆண்டு சீனாவில் கொரோனா பரவ தொடங்கியவுடன், அங்கு படித்துக்கொண்டிருந்த 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் அவசரமாக இந்தியாவுக்கு திரும்பினர். சீனா கொரோனா கட்டுப்பாடுகளை கடுமை ஆக்கியதாலும், விமானங்கள் நிறுத்தப்பட்டதாலும் இந்திய மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே சீனாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார்.

இந்திய மாணவர்களை சீனாவுக்கு வர அனுமதிப்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். இந்திய தரப்பின் கவலைகளுக்கு சீனா முக்கியத்துவம் அளிப்பதாகவும், விரைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் வாங் யி கூறினார்.

அதுபோல், இந்தியா-சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து தொடங்குவது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com