ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெசை மீண்டும் தேர்வு செய்ய இந்தியா ஆதரவு

ஐ.நா. சபையின் 9-வது பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2017 ஜனவரி 1-ந்தேதி பொறுப்பேற்றார்.
ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெசை மீண்டும் தேர்வு செய்ய இந்தியா ஆதரவு
Published on

அவரின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாத இறுதியில் முடிவடைகிறது. எனினும் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் பொதுச்செயலாளராக நீடிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் ஆன்டனியோ குட்டரெசை மீண்டும் ஐ.நா. பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கு இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஐ.நா. பொதுச்செயலாளரின் தலைமைத்துவத்துக்கு, குறிப்பாக இதுபோன்ற சவாலான காலங்களில் இந்தியா மதிப்பளிக்கிறது. ஆன்டனியோ குட்டரெஸ் 2-வது முறையாக ஐ.நா. பொதுச்செயலாளராக இருப்பதற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com