ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு


ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு
x

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் 18 நாடுகள் உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ளன.

ஐ.நா. சபை,

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும். இதற்கான உறுப்பினர் நாடுகளின் வரிசையில், மற்ற நாடுகளுடன் இந்தியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 18 நாடுகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளன.

2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் இதற்கான பதவி காலம் தொடங்கும். இதனை ஐ.நா. பொது சபையின் 79-வது கூட்டத்தொடருக்கான தலைவர் பிலிமோன் யாங் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா, பின்லாந்து, ஜெர்மனி, சீனா, ரஷியா, உக்ரைன், ஈகுவேடார், குரோஷியா, பெரு, நார்வே உள்ளிட்ட நாடுகளும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றுடன் இந்தியாவும் உறுப்பினர் நாடாகி உள்ளது. இதற்காக யாங் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது, நீடித்த வளர்ச்சியை நவீனப்படுத்துவது மற்றும் உலகளாவிய சவால்களை பற்றி பேசுவது என உங்களுடைய பணிகள், அனைவருக்கும் ஒளி நிறைந்த எதிர்காலம் உருவாக வழியேற்படுத்தும் என யாங் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story