

நியூயார்க்
ஈரான் மற்றும் ரஷிய வெளியுறவு துறை மந்திரிகளுடன் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 81-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். அவர், ஈரான் மற்றும் ரஷிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை நேரில் சந்தித்து பேசுச்வார்த்தை நடத்தினார்.
அப்போது இருதரப்பு விவகாரங்கள், பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளுடனான ஒத்துழைப்பு மற்றும் வளைகுடா பகுதிகளில் காணப்படும் மோதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பயணத்தில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை அவர் சந்தித்து பேசினார். இதேபோன்று, ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சியையும் சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லியில், இந்த மாத தொடக்கத்தில், பிரிக்ஸ் உச்சி மாநாடு நடந்தது. இதில், ரஷிய ஜனாதிபதி புதின் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான் உள்ளிட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.