இலங்கைக்கு இந்தியா 21 ஆயிரம் டன் யூரியா உதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், உர பற்றாக்குறையால் விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இலங்கைக்கு இந்தியா 21 ஆயிரம் டன் யூரியா உதவி
Published on

கொழும்பு,

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், உர பற்றாக்குறையால் விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சிக்கலில் இருந்து இலங்கை விவசாயிகளை மீட்பதற்காக 65 ஆயிரம் டன் யூரியாவை இலங்கைக்கு வழங்க இந்தியா முன்வந்தது. குறிப்பாக நடப்பு 'ஏலா' சாகுபடி பயிர்களை பாதுகாப்பதற்கு இந்த உதவியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 44 ஆயிரம் டன் யூரியா இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து மீதமுள்ள 21 ஆயிரம் டன் யூரியா நேற்று இலங்கைக்கு அளிக்கப்பட்டது. கொழும்புவில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்ல, இதை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இலங்கையின் உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் வகையில் இந்த உரம் வழங்கல் இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com