

புதுடெல்லி,
நியூயார்க்கில் ஐநா பொதுக்குழுவின் ஒரு பகுதியாக சார்க் நாடுகளின் வெளியுறத்துறை மந்திரிகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மந்திரிகள் ஒருவர் பேச்சை ஒருவர் புறக்கணித்தனர். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரையை பாகிஸ்தான் மந்திரி ஷா முகமது குரைசி முதலில் புறக்கணித்தார்.
ஜெய்சங்கர் கூட்டத்தை விட்டு வெளியேறிய பின்னரே குரைசி கூட்டத்திற்கு வந்தார். பின்னர் குரைசி பேசும்போது ஜெய்சங்கர் வரவே இல்லை.
கடந்த வருடம் இதுபோல் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பேசும்போது சுஷ்மா சுவராஜ் கூட்டத்தை விட்டு வெளியேறினார். அதன் தொடர்ச்சியாகவே நேற்று நடந்த சம்பவம் நடைபெற்றது.