உலக அளவில் அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில் இந்தியாவுக்கு 3-வது இடம்

உலக அளவில் அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில் இந்தியாவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.
உலக அளவில் அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில் இந்தியாவுக்கு 3-வது இடம்
Published on

வாஷிங்டன்,

உலக அளவில் அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில் இந்தியாவுக்கு (5.31 சதவீதம்) 3-வது இடம் கிடைத்து இருக்கிறது. முதல் 2 இடங்களை சீனா (20.67) மற்றும் அமெரிக்க (16.54) நாடுகள் பிடித்து உள்ளன. அதைத்தொடர்ந்து ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, ரஷியா, இத்தாலி, தென்கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அடுத்தடுத்த முதல் 10 இடத்தில் உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டில், 48 ஆயிரத்து 998 அறிவியல் மற்றும் பொறியியல் கட்டுரைகளை இந்தியா வெளியிட்டு உள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 2018-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 788 ஆக உயர்ந்து இருக்கிறது.

அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில், நாடுகள் வெவ்வேறு துறைகளால் வேறுபடுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, இந்தியா மற்றும் சீனா பொறியியல் கட்டுரைகளை வெளியிடுகின்றன. ஆனால், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் சுகாதார அறிவியல் கட்டுரைகளை வெளியிடுகின்றன.

மேற்கண்ட தகவலை அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளை, ஆய்வு ஒன்றை நடத்தி வெளியிட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com