

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,
ரஷியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருதரப்பு இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதில் முக்கியமாக கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 5 மற்றும் 6வது அணு உலைகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கனவே அங்கு 2 அணு உலைகள் கட்டப்பட்டுள்ளன. 3, 4வது அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன இருநாட்டு தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினார்கள். அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேரழிவு ஆயுதங்கள் பெருகுவதை தடுக்கும் விவகாரத்தில் அர்ப்பணிப்பை பகிர்ந்து உள்ளன என இருதரப்பு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி பேசுகையில், 70 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் ரஷியா இடையே வலுவான உறவுகள் உள்ளது. இந்தியா மற்றும் ரஷியா இடையிலான ஒத்துழைப்பானது விரிவடைந்து உள்ளது. இருதரப்பு முழு உறவு தொடர்பாகவும் நானும், அதிபர் புதினும் ஆலோசனை செய்தோம், எப்படி இருதரப்பு ஒத்துழைப்பையும் ஆழப்படுத்துவது என்றும் ஆலோசித்தோம். பாதுகாப்பு துறையில் இருதரப்பு உறவும் மிகவும் வலுவாகி உள்ளது என்றார்.