புதிதாக 1000 விமானங்கள் வாங்க இந்தியா திட்டம்?

விமானங்களை விரைவாக விநியோகம் செய்வதற்காக முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
புதிதாக 1000 விமானங்கள் வாங்க இந்தியா திட்டம்?
Published on: 

கெய்ரோ,

போக்குவரத்து தேவைக்காக புதிதாக 1000 விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பயணிகள் விமானம்

இந்தியாவில் விமானப் போக்குவரத்துக்கான தேவை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நிலவும் கடுமையான விமானப்பற்றாக்குறையைச் சமாளிக்க மேலும் 1, 000 பயணிகள் விமானங்களை வாங்க இந்தியா தயாராக இருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 1, 200-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மொத்தத் தேவையைப் பூர்த்தி செய்ய 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானங்களுக்குக் கடுமையான பற்றாக்குறை

இரண்டு நாள்பயணமாக எகிப்து சென்றுள்ள பியூஷ் கோயல், நேற்று அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் தற்போது பயணிகள் விமானங்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்தார்.

இதனைச் சமாளிக்க மேலும் 1, 000 விமானங்களை வாங்கத் தயாராக இருப்பதாகவும், விமானங் களை விரைவாக விநியோ கம் செய்யுமாறு முன்னணி சர்வதேசவிமானத்தயாரிப்பு நிறுவனங்களிடம் வலியு றுத்தி வருவதாகவும் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இந்தியா ஏற்கெனவே 1, 200-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஆர்டர் வழங்கியுள்ளது. எங்களுடைய தேவைக்கு 2,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப் படுகின்றன. எனவே, மேலும் 1, 000 விமானங்களை வாங்கவும் தயாராக இருக்கிறோம். விமானங்களை விரைவாக விநியோகம் செய்வதற்காக முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்தியா எகிப்து இடையிலான விமானப்போக்குவரத்து

இந்தியாவில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, சர்வதேச விமான இணைப்புகளையும் விரிவுபடுத்த முடியும். குறிப்பாக, இந்தியா எகிப்து இடையிலான விமானப்போக்குவரத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். கூடுதல் விமானங்கள் கிடைத்தால் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் அதிக விமானங்களை இயக்க முடியும். தற்போது எகிப்து நாட்டின் விமான நிறுவனமான எகிப்து ஏர், இந்தியா - எகிப்து இடையே நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X