2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும் ஐநா தகவல்

2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும் ஐநா தகவல்
Published on

தற்பேது 760 கோடியாக இருக்கும் உலக மக்கள் தெகையானது 2030 ஆம் ஆண்டில் 860 கோடியாகவும், 2050 ஆம் ஆண்டில் 980 கோடியாகவும் பில்லியனாகவும், 2100 ஆம் ஆண்டில் 1120 கோடியாகவும் உயரும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 83 கோடி மக்கள் ஒவ்வெரு ஆண்டும் உலக மக்கள் தெகையில் சேர்க்கப்படுவதால், மக்கள்தெகை அளவு அதிகரிப்பு தெடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களில் ஐ.நா. சபை வெளியிட்டுள்ள 2017க்கான திருத்தங்கள், எதிர்காலத்திற்கான உலகளாவிய மக்கள்தெகை அதிகரிப்புகள் மற்றும் எதிர்காலங்களின் விரிவான ஆய்வுகளை வழங்கி உள்ளது.

புதிய நிலை வளர்ச்சிகளைஅடைவதற்கு நேக்கமாகக் கெண்ட கெள்கைகளை வழிகாட்டுவதற்கு இந்த தகவல்கள் அவசியம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

சீனா (140 கோடி ன் மக்களுடன்) மற்றும் இந்தியா (130 கோடி மக்களுடனும்), உலகின் மெத்த மக்கள் தெகையில் 19% மற்றும் 18% மக்களை முறையே கொண்டுள்ளது.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளில் அல்லது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தெகை சீனாவை விட அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கணக்கிடுகையில் மக்கள் தொகையை கொண்டு கணக்கிடப்பட்ட பெரிய நாடுகளின் வரிசையில் நைஜீரியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

இதன் விளைவாக, தற்பேது நைஜீரியாவின் மக்கள்தெகை 7 வது இடத்தில் உள்ளது, இது அமெரிக்காவை விட அதிகமாகும்.

இதனால் 2050 ஆம் ஆண்டுக்கு முன்னர் உலகின் மூன்றாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக நைஜீரியா மாறிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com