இந்தியாவுக்கு 8 கோடி தடுப்பூசியில் ஒரு பங்கு கோவேக்ஸ் திட்டத்தின்மூலம் அமெரிக்கா வழங்குகிறது

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை எதிர்த்துப்போரிட்டு வருகிற இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்தியாவுக்கு 8 கோடி தடுப்பூசியில் ஒரு பங்கு கோவேக்ஸ் திட்டத்தின்மூலம் அமெரிக்கா வழங்குகிறது
Published on

இதே போன்று உலகின் பல நாடுகளில் தடுப்பூசி கிடைப்பதில்லை. வளர்ந்து வரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி சம அளவில் கிடைக்க செய்வதற்காக ஐ.நா. ஆதரவுடன் கோவேக்ஸ் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உலக சுகாதார நிறுவனமும், அதன் கூட்டாளி அமைப்புகளும் கரம் கோர்த்து செயல்படுகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா பயன்படுத்தாத தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்குவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி இந்த மாத இறுதிக்குள் 8 கோடி தடுப்பூசிகளை கோவேக்ஸ் திட்டத்துக்கு அமெரிக்கா வழங்கும். இந்த தடுப்பூசியில் ஒரு பங்கு இந்தியாவுக்கு கிடைக்க உள்ளது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவுக்கு தடுப்பூசி எப்போது போய்ச்சேரும் என்ற விரிவான விவரம் என்னிடம் இல்லை. நிச்சயமாக கோவேக்ஸ் திட்டத்தின்மூலம் 8 கோடி தடுப்பூசிகளில் ஒரு பங்கு இந்தியாவுக்கு கிடைக்கும். மேலும் கோவேக்ஸ் மூலம் இதுவரை 60 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டது. இங்கு வாழ்கிற இந்தியர்கள் 400 மில்லியன் டாலர்களை (சுமார் ரூ.3,000 கோடி) நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com