

பகு,
இந்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அஜர்பைஜான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் பகு நகரில் வெனிசுலா நாட்டு வெளிவிவகார துறை மந்திரி ஜார்ஜ் அரீயாசா உடன் இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் வேளாண்மை, வணிகம், முதலீடு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்தியாவுடனான வலிமையான உறவுகளை கடந்த மாதம் ஆதரித்து பேசிய அரீயாசா, பல வருடங்களுக்கு முன் இந்தியா வந்தபொழுது அமைதி, அன்பு மற்றும் அகிம்சை ஆகியவற்றின் மதிப்புகளை கற்று கொண்டேன் என கூறினார்.