தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் - ஐ.நா.


தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் - ஐ.நா.
x

Image Courtesy : AFP

தூய்மையான எரிசக்தி, தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

இந்தியா ஏற்கனவே முக்கியமான காலநிலை இலக்குகளை அடைந்து வருகிறது என ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. காலநிலை மாற்ற அமைப்பின் தலைவர் சைமன் ஸ்டீல் கூறியதாவது;-

"இந்தியா ஏற்கனவே முக்கிய காலநிலை இலக்குகளை அடைந்து வருகிறது. மேலும் தூய்மையான எரிசக்தி மற்றும் தொழில்துறையை பயன்படுத்தி இந்தியா இன்னும் வேகமாக வளர வாய்ப்புள்ளது. அந்த வளர்ச்சியானது இந்தியாவின் பொருளாதார செழிப்புக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் கூடுதலாக லட்சக்கணக்கான வேலைகள், சிறந்த சுகாதார கட்டமைப்புகள், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மலிவான, பாதுகாப்பான எரிசக்தி ஆகியவற்றோடு, இந்திய மக்களின் வாழ்க்கைத் தரமும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

இந்தியாவின் தனித்துவமான புவியியல் அமைப்பு மற்றும் மிகப்பெரிய மக்கள்தொகை காரணமாக, ஏராளமான மக்கள் காலநிலை தாக்கங்களுக்கு ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மக்கள்தொகை மற்றும் புவியியல் பன்முகத்தன்மைதான் இந்தியாவை வலிமையாக்குகிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story