விமானத்தில் தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் சில்மிஷம் இந்தியர் கைது

மனைவி அருகில் இருக்கும் போதே விமானத்தில் தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்தியர் கைது செய்யபட்டார். #sexualabuse
விமானத்தில் தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் சில்மிஷம் இந்தியர் கைது
Published on

வாஷிங்டன்

விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது தூங்கிகொண்டு இருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக 34 வயதான தமிழகத்தை சேர்ந்தவர் மத்தியகாவல் படையினரால் மெச்சிகனில் கைது செய்யப்பட்டார்.

பிரபு ராமமூர்த்தி ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் லாச்வேகாசில் இருந்து டெட்ராய்ட் சென்றார். அவருடன் அவரது மனைவியும் பயணம் செய்து உள்ளார். இருந்தும் அருகில் இருந்த 22 வயது பெண்ணிடம் பிரபு ரமமூர்த்தி சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதை தொடர்ந்து பாதிக்கபட்ட பெண் விமான ஊழியர்களிடம் புகார் கூறி உள்ளார்.

பாதிக்கப்பட்டவள் தனது ஆடைகள் அகற்றபட்டது என அழுது உள்ளார். அவர் புகார் கூறிய 40 வது நிமிடம் விமானம் தரையிறங்கி உள்ளது.

பாதிக்கபட்ட பெண் கூறும் போது நான் தூங்கி கொண்டு இருக்கும் போது அந்த மனிதர் எனது பேண்ட் மற்றும் சட்டையின் பட்டன்களை கழற்றினார். பின்னர் எனது ஆடைக்குள் கையை நுழைத்தார் என கூறினார்.

அமெரிக்கவாழ் இந்தியரான ராமமூர்த்தி மீது பாலியல் துஷ்பிரயோயக் செய்ததாக புகார் கூறப்பட்டு உள்ளது. விமானம் தரையிறங்கியதும் ஜாமீன் இல்லாமல் அவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் தான் மாத்திரை எடுத்து கொண்டு தூங்கிவிட்டதாக இந்த குற்றத்தை ராமமூர்த்தி மறுத்து உள்ளார்.

ராமமூர்த்தி மற்றும் அவரது மனைவி தற்காலிக விசாவில் வாழ்ந்து வருகின்றனர். ராமமூர்த்தி ஒரு நிறுவனத்தில் புராஜெக்ட் மானேஜராக வேலை பார்த்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com